--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்..!

4

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல் காரணமாக சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

 

முதற்கட்ட நடவடிக்கையாக 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8:30 மணிக்கு தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு அவற்றில் தனித்தனியாக அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள்.

 

வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு திசையிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கும். 14 மேஜைகளில் ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட முத்திரை சரியாக இருக்கிறதா என்பது முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதி செய்யப்படும்.

 

தொகுதி வாக்குச் சாவடி வார்டு வாரியாக பதிவான வாக்குகள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். வாக்குப்பதிவு நாளன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், எண்ணப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். குறைந்த அளவாக 15 சுற்றுகளும், அதிக அளவாக 30 சுற்றுகள் வரையும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவில் முடிவுகள் வெளியிடும். முன்பாக அரசியல் கட்சி முகவர்களின் கையொப்பங்கள் பெறப்படும்.

 

ஒவ்வொரு சுற்று முடிவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும். பிற்பகலுக்கு முன்னதாக முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார் வெற்றி பெறவிருக்கும் வேட்பாளர் யார் என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும்.

 

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதற்கான சான்றை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார் என்றும் அதை வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Right Menu Icon