--- --:--:-- --

ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை கண்காணிக்க குழு நியமனம்..!

3

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை கண்காணிக்க தமிழ்நாடு அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது.

 

இதுதொடர்பாக மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டிருக்கும் அரசாணையில் தூத்துக்குடி ஆட்சியர் தலைமையிலான குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

அந்தக் குழு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக்சிஜன் தயாரிக்கும் பணி முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கு.ம் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி மற்றும் அதனை நிர்வகிக்க ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது குறித்து கண்காணிப்பு குழு முடிவு செய்யும்.

 

ஆக்சிஜன் ஆலையை இயக்குவது தொடர்பாக சட்ட பூர்வமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை அவர்களுடன் இணைந்து நிவர்த்தி செய்வது பற்றியும் கண்காணிப்புக்குழு முடிவெடுக்கும்.

 

இவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றனவா என்பது தொடர்பாக கண்காணிப்புக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு கோரிக்கை அனுப்பும் என்றும் தமிழ்நாடு அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon