பேருந்துகளில் நின்றபடி பயணித்தவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட அதிகாரிகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்துகளில் நின்றபடி பயணித்தவர்கள் பாதிவழியில் இறக்கி விடப்பட்டனர். தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகளில் பயணிகள் அமர்ந்தபடி மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் இதனை கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சோதனைச்சாவடி அதிகாரிகள் நின்றபடி பயணித்த பயணிகளை இறங்கிவிட்டனர். ஓட்டுநர் நடத்துநர் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






