--- --:--:-- --

ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது : ஸ்டாலின்

8

திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலை ஆலை ஸ்டெர்லைட் எந்த சூழலிலும் திறக்கப்படாது என அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முகநூலில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

திமுக சார்பில் எம்பி கனிமொழி பங்கேற்று கட்சி நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது தற்காலிகமானது தான் என்றும் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் எந்த சூழலிலும் திறக்கப்படாது எனவும் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon