--- --:--:-- --

சர்வதேச பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்..!

3

ர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

 

இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா ,சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்கின்றனர். 2030 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தை பாதுகாக்க இலக்கு என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். மேலும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான செயல்திட்டம் நிதிஉதவி, எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

 

அனைத்து நாடுகளின் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தீர்மானம் நவம்பரில் நடைபெறும் ஐநா பருவநிலை உச்சிமாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon