--- --:--:-- --

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி கொள்ளையன் பலி..!

4

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி கொள்ளையன் இறந்தான் .சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் எம் குமார் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.

 

கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து மயங்கி கிடப்பதாக சிவகுமாருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

 

மருத்துவர்கள் மயங்கி கிடந்த அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய கொடுங்கையூர் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் மாதவரம் பால்பண்ணை அடுத்த பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பது தெரியவந்தது. வண்ணாரப்பேட்டை பல்வேறு காவல் நிலையங்களில் வேலாயுதம் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

கட்டுமானம் நடைபெற்ற இடங்களிலிருந்து மின்மோட்டாரை திருடும் போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக விசாரணையில் தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon