அண்ணன் உயிரிழந்த 5 நிமிடத்தில் தம்பியும் உயிரிழந்த சோகம்..!
மயிலாடுதுறை அருகே உடல்நலக்குறைவால் அண்ணன் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்ட நல்லூர் ஊராட்சி பக்கமாக கீழ தெருவைச் சேர்ந்தவர் 71 வயதாகும் வீரமணி. இவர் மின்வாரியத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் 64 வயதாகும் குணசேகரன். இவருக்கு தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
இருவருக்கும் திருமணமாகி மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற வீரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் உள்ள தனது தம்பி வசிக்கும் பூர்வீக வீட்டில் வந்து தங்கியுள்ளார். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அழைத்து செல்ல தம்பி குணசேகரன் காரில் ஏற்றி உள்ளார். ஆனால் காரிலேயே வீரமணி உயிரிழந்துள்ளார். அண்ணன் தன் கண்முன்னே உயிரிழந்ததை கண்ட தம்பி குணசேகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இடத்திலேயே உயிரிழந்தார்.






