--- --:--:-- --

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

2

மிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

நாளை நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தின் நாளையுடன் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon