வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்..!
ஈரோட்டில் கரூர் வைசியா வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர்ஸ் காலனியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர் ஒருவர் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு பலத்த மழை பெய்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து கற்களால் இயந்திரத்தை உடைத்தது தெரியவந்தது.
பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.






