--- --:--:-- --

தங்க புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஜோதிடர்..!

5

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தங்க புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி விவசாயிடம் 22 லட்ச ரூபாய் பணம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி கொள்ளையதி த்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

புத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேலு என்ற விவசாயி குடும்ப பிரச்சனை காரணமாக கடையூர் கிராமத்தில் சசிகுமார் என்று ஜோதிடரை பார்க்க சென்றார். அப்போது அந்த ஜோதிடர் விவசாயியின் தோட்டத்தில் தங்க புதையல் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி யுள்ளார்.

 

அதை நம்பிய விவசாயி தனது தோட்டத்தில் பூஜைகள் செய்ய சிறிது சிறிதாக 22 லட்ச ரூபாய் ரொக்கம் 45 சவரன் தங்க நகைகளை கொடுத்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து செல்போன் ஒன்றை விவசாயி ஜோதிடருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

 

ஆனாலும் ஜோதிடர் எடுத்து தரவில்லை என்றும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி பணம் நகை பொருட்களை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு ஜோதிடர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து விவசாயி தங்கவேல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

 

இதனையடுத்து போலீசார் ஜோதிட சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon