--- --:--:-- --

கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற நபர்..! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

8

சென்னை அருகே பொதுமக்கள் நிறைந்த சாலையில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 8 மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரேணுகா நகரை சேர்ந்த கீதா என்ற கர்ப்பிணி வீட்டிற்கு வெளியே இருக்கும் சாமியை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென கர்ப்பிணியை பிடித்து இழுத்து சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனர்.

 

அப்போது சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் கர்ப்பிணிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சத்தம் போட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon