திருப்பத்தூரில் இரவில் ஏற்பட்ட நில அதிர்வு..!
திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உசிலம்பட்டி, நாற்றம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8.30 அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
அது பலத்த சத்தத்துடன் செல்போன் வைப்ரேஷன் சப்தம் போன்று இருந்ததாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். மேலும் பயங்கர சத்தம் கேட்டதால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவில்லை.






