தமிழக முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை..! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக நோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
கொரொனா பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முககவசம் அணிதல். தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது தமிழக அரசு. திரையரங்குகள், பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கொரொனா நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







