மகாராஷ்டிராவில் 2 அல்லது 3 வாரங்களுக்கு ஊரடங்கு போடப்படும்..!
மகாராஷ்டிராவில் எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு முழு ஊரடங்கு தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு உத்தவ் தாக்கரே இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை முழு ஊரடங்கு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பொது முடக்கம் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு அமலுக்கு வரும் என்றும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் நவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கி உள்ள சூழ்நிலையில் பொதுமுடக்கம் என்பது பண்பாட்டு ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 63 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 349 பேர் உயிரிழந்தனர்.







