தமிழகத்தில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருந்தொற்று அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில் சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் மதம்சார்ந்த கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து அனுமதி எனவும் தெரிவித்துள்ளது.






