--- --:--:-- --

தமிழகத்தில் சில இடங்களில் பெய்த கோடை மழை..!

3

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் வழியில் சில இடங்களில் கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டாரத்தில் சித்தரி போன்ற பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராத சூழல் இருந்தது.

 

இந்த நிலையில் குருவிக்கரம்பை, கொள்ளை உள்ளிட்ட இடங்களில் திடீரென ஒரு மணி நேரத்திற்குள் பலத்த மழை பெய்ததால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய திடீர் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

Leave a Reply

Right Menu Icon