--- --:--:-- --

ஊருக்குள் புகுந்து மாட்டை பிடித்த முதலை..!

9

டலூர் அருகே நள்ளிரவில் இரை தேடி ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த முதலை அங்குள்ள ஒரு மாட்டை பிடிக்க முயன்று உள்ளது.

 

அலறல் சத்தம் கேட்டு வந்த உரிமையாளர் முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை விரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி 300 கிலோ எடை 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை பத்திரமாக பிடித்தனர்.

 

முதலை அருகிலுள்ள வெள்ளாற்றில் இருந்து இரை தேடி ஊருக்குள் வந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon