வரும் 4 வாரங்கள் அபாயமானது..! பெருந்தொற்று பரவல் தீவிரம்..!
கொரொனா பெருந்தொற்று பரவலின் தீவிரம் கடந்த முறையை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று நிதி ஆயோக் சுகாதாரக்குழு எச்சரித்துள்ளது. வரும் 4 வாரங்கள் அபாயமானது என நிதி ஆயுக் உறுப்பினர் பீகே பால் தெரிவித்துள்ளார்.
நோயை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு தேவைப்படுவதாகவும் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து பெரும் தொற்றுக்கு எதிரான போரில் வெல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தயங்காமல் பெருந்தொற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உலகின் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது இந்தியா மட்டும்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.







