--- --:--:-- --

சானிடைசர், முகக்கவசம் இல்லை! கொரோனா விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்!

WhatsApp Image 2021-04-06 at 8.18.53 PM

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவை இல்லாமல் வாக்காளர்கள் வாக்களித்ததை பார்க்க முடிந்தது. இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு சரியில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணியுடன் நிறைவு பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு பின்னர் மந்தமானது. மதியம் பல வாக்குச்சாவடிகள் காற்று வாங்கின. இம்முறை கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் சானிடைசர், கையுறை உள்ளிட்ட கூடுதல் வசதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணியாத காவலர்கள்

 

ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் கையுறை, சானிடைசர் வழங்கலை பார்க்க முடியவில்லை. ஒருசில இடங்களில் வாக்குசாவடி அலுவலர்கள் கூட முகக்கவசம் இல்லாமல் இருந்ததை “குற்றம் குற்றமே” நிருபர்கள் குழு கண்டறிந்தது. அனுப்பர்பாளையம் ரங்கநாதபுரம் வாக்குச்சாவடி, கனியாம்பூண்டி வாக்குச்சாவடி உள்ளிட்ட இடங்களில்  இதுபோன்ற சூழலை பார்க்க முடிந்தது.

மாவட்டத்தில் ஒருசில வாக்குச்சாவடிகளில் கையுறை, சானிடைசர் பயன்பாடு இருந்த போதும் பெரும்பாலான இடங்களில் கையுறை வழங்கவில்லை என்பதை, வாக்காளர்களும் நம்மிடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை சில அரசியல் கட்சி பிரமுகர்களுடன் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Right Menu Icon