--- --:--:-- --

டெல்லியில் விற்கப்படும் தங்க பீடா..!

8

டெல்லியில் உள்ள ஒரு கடையில் தங்க பீடா விற்பனையை கண்டு மக்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் விலை என்றைக்காவது குறையாதா என்று மக்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்கத்திற்கு அதிக டிமாண்ட் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

 

தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். அந்த வகையில் பலரும் தங்கம் வாங்க திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் வேளையில் டெல்லியில் ஒரு கடையில் தங்க பீடா தயாரித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள முக்கிய வணிகப் பகுதியான அந்தப் பகுதியில் ஜமெஸ் என்ற கடை அமைந்துள்ளது.

 

அங்கு விற்கப்படும் பீடாவை பற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வீடியோவில் கடைக்குள் இருக்கும் பெண்மணி ஒருவர் வழக்கம்போல் பீடா செய்ய தொடங்குகிறார். வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு, இனிப்பு சட்னி, தேங்காய் துருவ,ல் ஆகியவை கொண்டு அடுக்குகிறார்.

 

பின்னர் அதனை மெல்லிசான ஒரு தங்க சீட் கொண்டு மூடி அதன் மீது செர்ரி பழம் ஒன்றை வைக்கிறார். தங்க கவரால் மூடப்பட்ட பீடா விலை 600 ரூபாய். தங்கத்தை உணவுகளில் பயன்படுத்துவதற்கு ஆடம்பரமாக இருந்தாலும் அதை உட்கொள்வதால் உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்தும் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon