மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா..!
மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் மும்பை குற்றவியல் உதவி ஆய்வாளர் சச்சின் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் உள்துறை அமைச்சராக இருக்கும் அனில் தேஷ்முக் ஹோட்டல்களில் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு சச்சின் உள்ளிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பரம்வீர் சிங் வழக்கு தொடுத்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மிக முக்கியமான குற்றச்சாட்டு குறித்து 15 நாட்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே துறை அமைச்சரான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.






