செவ்வாய் கிரகத்தில் இருமுறை ஏற்பட்ட நில நடுக்கம்..!
செவ்வாய் கிரகத்தில் இருமுறை நில நடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை போன்ற செவ்வாயில் நிலத்தடி தட்டுகள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ஆய்வு நடத்திய சோதனையில் அங்கு இரு முறை நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சைப்ரஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகள் முறையே 3.3 மற்றும் 3புள்ளி ஒன்றாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இறப்புக்குப் பின்னர்சிறிதும் பெரிதுமாக 500 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் நாசா கூறியுள்ளது.






