--- --:--:-- --

பெருந்தொற்றின் நான்காவது அலை வீசுவதாக தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்..!

2

டெல்லியில் பெருந் தொற்றின் நான்காவது அலை வீசுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த திட்டம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தினசரி பாதிப்பு13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் தொற்று பாதித்த பாதித்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தற்போது பெருந்தொற்று அலை நான்காவது வீசுவதாகவும் தெரிவித்தார் .

 

தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon