உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்..!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்த சீமான் தவறுதலாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்டு விவசாய சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.






