--- --:--:-- --

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 127வது நாளாக விவசாயிகள் போராட்டம்..!

6

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து 127 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்டப் பேரணி நடத்தப்போவதாக சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon