45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவக்கம்..!
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் தொடங்குகிறது. தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நாடெங்கும் முதன் முதலில் தொடங்கியது. முதலில் மருத்துவத் துறையினருக்கு போடப்பட்ட நிலையில் பின்னர் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளிலும் அல்லது தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாளை முதல் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றும் எனினும் தடுப்பூசிகள் வீணாவதை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.






