உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் ஆதரவு திரட்டியுள்ளார்..!
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட கூடியவர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தொகுதியில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொண்டாலும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழலில் அவரது அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள் தற்போது அவர் போட்டியிட தொகுதியில் அவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி வருகிறார்.
முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய காரணத்தினால் அவருக்கான வெற்றி வாய்ப்பினை பலப்படுத்தக்கூடிய வகையிலும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.






