ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் விலையில் நாள்தோறும் ஏற்றமும் இறக்கமும் காணப்படும் நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.






