--- --:--:-- --

மாநிலம் முழுவதும் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு அமல்..!

7

காராஷ்டிர மாநிலத்தில் நேற்று இரவு முதல் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வேகமாக பரவிவருகிறது. மின்னல் வேகத்தில் பறந்து வரும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

 

இருப்பினும் பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

தொற்று பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு நேற்று முதல் மாநிலத்தில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon