நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது..!
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை மாலைபொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதனையொட்டி புதுச்சேரியில் பறக்கும் கேமராக்களுக்கும், மற்றும் கூட்டம் கூடிகூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று மாலை முதல் நாளை மாலை வரை பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதியும் பறக்கும் கேமரா மற்றும் சிறிய ரக விமானங்கள் ஏதும் வான் வெளியில் செல்வதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






