தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கொரொனா அதிகம் பாதித்துள்ளதாக தகவல்..!
இந்தியாவில் கொரொனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடம்பெற்றிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் கொரொனா அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் இந்த மூன்று மாவட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இந்த மூன்று மாவட்டங்களை கண்காணிக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என கூறினார்.






