--- --:--:-- --

மூன்றாவது கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறும்..!

4

ந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மேஸ்ட்ரோ அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

 

இந்திய அணியில் கே எல் ராகுல் 108 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் 40 பந்துகளில் 77 ரன்களும், விராட்கோலி 66 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.

 

இதையடுத்து 337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசம் ராய், மாஸ்ட்ரோ இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ராய் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

களத்திற்கு வந்த பென்ஸ்ட்ரோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸிடோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி நிலை சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon