--- --:--:-- --

கோவையை தொடர்ந்து திருச்சி கலெக்டர், எஸ்.பி. மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

EC 01

தேர்தல் தொடர்பான புகாரை அடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

அண்மையில், திருச்சி அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில், முசிறியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜின் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மீதும், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீதும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார் வந்தது. இந்த விவகாரத்தையடுத்து, தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது.

 

அதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, சார் ஆட்சியர் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றி வந்த மயில்வாகனன், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சார் ஆட்சியராக விசுவ மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரை, அண்மையில் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon