--- --:--:-- --

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 5 மாநில தேர்தல்களில் தபால் வாக்கு வசதி இல்லை..!

5

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 5 மாநில தேர்தல்களில் தபால் வாக்கு வசதி இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக பேசிய அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மின்னணு தபால் வாக்குப் போட வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறையில் திருத்தம் செய்யும் யோசனையை தேர்தல் ஆணையம் முன்வைத்தது.

 

ஆனால் அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார். இதன்காரணமாக ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிப்பது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon