--- --:--:-- --

முடியை ஸ்ட்ரைட்டன் செய்ய முயன்ற 12 வயது சிறுவன் பலி..!

4

கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவை பார்த்து தலைமுடியை ஸ்ட்ரைட்டன் செய்ய முயலும்போது பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நவீன காலத்தில் பெற்றோரின் அன்றாட சிக்கல்களில் ஒன்று குழந்தைகளிடம் இருந்து செல்போனை பிரிப்பது. பெற்றோர்கள் சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் செல்போன்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் உடல் அளவிலும் மன அளவிலும் பிள்ளைகளுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

 

சில சிறுவர்கள் அடிமைத்தனத்தின் உச்சமாக கேமில் தோற்றுப்போனால் வீட்டை விட்டு செல்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற துயர முடிவை எடுக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என பெற்றோர் பலரும் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

இந்த நிலையில் திடீரென தலைதூக்கிய கொரொனா பெற்றோர்களின் போராட்டத்தை மீண்டும் கடினமாகிவிட்டது. கொரொனா பரவலைத் தடுக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளில் எடுக்கப்பட்டது.

 

அதனால் பிள்ளைகளுக்கு செல்போன் தர வேண்டிய சூழலுக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு 12 வயதில் சிவ நாராயணன் என்ற மகன் இருந்தார். சிவ நாராயணன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

 

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் பகிரப்படும் வீடியோக்களை அந்த சிறுவன் பார்த்து வந்துள்ளான். அந்த வகையில் தலை முடியை ஸ்ட்ரைட்டன் செய்யும் வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளான் சிவ நாராயணன்.

 

இந்நிலையில் சொந்த வேலையாக பெற்றோர் வெளியே செல்ல பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென குளியலறைக்கு சென்று தனது முடியை ஸ்ட்ரைட்டன் செய்யும் முயற்சியில் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார் .நெருப்பு உடல் எங்கும் பரவ பலத்த தீக்காயங்களுடன் சிவ நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon