பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை..!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரேமலதாவின் சகோதரருக்கு கொரொனா உறுதியானதையடுத்து விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்கு அழைத்தனர். முதலில் மறுத்த அவர் பிறகு நேற்று பிற்பகலில் பரிசோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தேமுதிக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பார்த்தசாரதி கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.






