வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
.இதுவரை விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தியது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 120 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.







