காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார். கட்சி பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபடும் அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய வசந்த் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.






