கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைய உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பாரல் ஒன்றுக்கு 71 டாலருக்கு விற்கப்பட்டது. சென்னையில் தற்போது 64 டாலராக குறைந்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 90 ரூபாயை தாண்டி விட்ட பெட்ரோல் விலை கடந்த 24 நாட்களாக அதே நிலை நீடித்து வந்த நிலையில் இன்று 14 காசுகள் குறைந்து 97 ரூபாய் ஐந்து காசுக்கு விற்கப்படுகிறது.
இதேபோல் டீசல் விலை 20 காசுகள் குறைந்து 86 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.







