நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!
நடிகர் மற்றும் மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனருமான கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு பல்வேறு உடல்நல சோதனைகள் நடத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரொனா தொற்று இல்லை என தகவல் தெரிவிக்கின்றன.






