வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி..!
வெளி நாட்டில் இருக்கக்கூடிய இந்தியர்கள் சட்டமன்ற தேர்தலில் எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெளிநாட்டிற்கு சென்று இருக்கும் இந்தியக் குடிமக்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் இந்தியாவில் ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6ஏ என்பதை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களையும், இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும் இந்த படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனைத்து ஆவணங்களில் 2 பிரதிகளை சுய சான்றளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நேராக விண்ணப்பத்தை எழுப்ப வேண்டும் என்றால் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






