செவ்வாய் கோளில் இருந்து ஒலிப்பதிவை அனுப்பியுள்ள விண்கலம்..!
செவ்வாய்க் கோளுக்கு நாசா அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் விண்கலம் முதன் முதலில் செய்த ஒலிப்பதிவை அனுப்பியுள்ளது. செவ்வாய் கோளை ஆய்வு செய்ய பெர்சிவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவில் நாசா அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம் செவ்வாயின் நிலப்பரப்பு தன்மையை அறிவதற்காக லேசர் கதிர்களைச் செலுத்தி அதன் எதிரொலிகள் மூலம் ஒலி பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவை நாசா வெளியிட்டுள்ளது.
லேசர் கற்றைகளை மோதவிட்டு எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு செவ்வாய்க்கு நிலப்பரப்பின் தன்மை அறிந்து கொள்ள உதவும் என நாசா தெரிவித்துள்ளது.






