--- --:--:-- --

தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது..!

3

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 221 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

 

வெள்ளியின் விலை கிலோ 900 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 91 காசுகள் உயர்ந்து 71 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon