--- --:--:-- --

2 கிராம் நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த நபர்..!

6

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகை அணிந்து இருந்த தாயையும் மகளையும் படுகொலை செய்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

நூலங்குப்பம் பகுதியை சேர்ந்த கைம்பெண் விஜயலட்சுமி தனது 2வது மகள் சந்தியாவுடன் கடந்த 1ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி இடையார் பாளையம் பகுதியில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றபோது படுகொலை செய்யப்பட்டனர்.

 

இது தொடர்பாக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரியும், ஆயுள் தண்டனை கைதியுமான இருசப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தாயையும், மகளையும் படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட இருசப்பன் அவர்கள் அணிந்து இருந்தது கவரிங் என்பது தெரியாமல் கொலை செய்ததாகவும் இறுதியில் 2 கிராம் தங்கம் மட்டுமே மிஞ்சியதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon