--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 474: ஐந்து பேர் உயிரிழப்பு; டிஸ்சார்ஜ் 482 பேர்!

corona 01

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 474 ஆக இருந்தது; 5 பேர் உயிரிழந்த நிலையில், 482 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

 

உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; தடுப்பூசிகள் மட்டுமே கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 40 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வந்துள்ளது.

 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 474 பேர் இன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 52 ஆயிரத்து 16ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,009 ஆக குறைந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 276 பேர் ஆண்கள், 198 பேர் பெண்கள். அதிகபட்சமாக, சென்னையில் இன்று 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதே நேரம், கொரோனாவால் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,501 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 482 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

 

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில், 50,091 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்ததாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon