--- --:--:-- --

குறிப்பிட்ட இருக்கைகளுக்கு என்று தனியாக கட்டணம் செலுத்தியும் கிடைக்கவில்லை..!

8

குறிப்பிட்ட இருக்கைகளுக்கு என்று தனியாக கட்டணம் செலுத்திய பிறகும் அதை ஒதுக்கி இந்தியாவிற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பெங்களூருவிலிருந்து மும்பை செல்ல ரோஹித் என்பவரும் அவரது மனைவியும் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

 

தம்பதியினரின் மனைவிக்கு முதுகு வலி இருப்பதால் கால்களை வைக்க வசதியாக குறிப்பிட்ட இரண்டு இருக்கைகளுக்கு தனியாக பணமும் செலுத்தியுள்ளனர். பயணத்தின் போது அந்த இருக்கைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

 

இந்த வழக்கில் 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன் இருக்கைகளுக்கு வாங்கிய ஆயிரம் ரூபாய் தனி கட்டணத்தையும் திருப்பி வழங்குமாறு நீதிமன்றம் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon