--- --:--:-- --

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு..!

1

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

 

தற்போது 2019- 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார்ஜானகி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

 

தயாரிப்பாளர்கள் கலைப்புலி, தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், மனோஜ் குமார், ரவிமரியா இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட அவர்களுக்கு நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon