--- --:--:-- --

மாமியாருடன் ஏற்பட்ட தகாத உறவு ..! கொலையில் முடிந்த சம்பவம் ..!

3

விழுப்புரத்தில் மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி எதிரே உள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின் மனைவி சித்ரா. சேகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் .

 

சித்ராவிற்கு 13 வயது இருக்கும்போது சேகருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 39 வயதாகும் சித்ராவுக்கு 24 வயதில் கௌசல்யா என்ற மகளும் 22 வயதில் சக்திவேல் என்று மகனும் இருக்கின்றனர். இதில் கௌசல்யாவுக்கு திருமணமாகிவிட்டது.

 

சக்திவேலுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கௌசல்யாவின் கணவர் சோனு சர்மாவுக்கும், சித்ராவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் சித்ராவுக்கும், விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனை சித்ரா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு ஷர்மா மாமியார் சித்ராவிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது தடுக்க முயன்ற பாலமுருகனை ஷர்மா கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார்.

 

பாலமுருகனை வெட்டுவதை தடுக்க முயன்ற சித்ராவுக்கும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்துவிட்டு தப்பிய சோறு சர்மாவை விழுப்புரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon