டீ சூப்பர் பா என்று கடைக்காரரை பாராட்டிய முதல்வர் பழனிசாமி..!
திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் தேநீர் கடையில் தேநீர் அருந்தி உள்ளார்.
6-வது கட்ட தேர்தல் பரப்புரைக்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து தமிழக முதல்வர் இன்று காலை நெல்லை மாவட்டங்களில் வள்ளியூர், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இதையடுத்து நெல்லை ஆலங்குளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மகிழ்வண்ணநாதபுரம் தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். அந்த கடையில் டீ சூப்பர் பா என்று கடைக்காரரே பாராட்டியுள்ளார்.






