மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் சாமியாரை கத்தியால் குத்திய கணவர்..!
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் அருள்வாக்கு சொன்ன சாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் சென்னை மதுரவாயல் அருகே அரங்கேறியுள்ளது.
அகில இந்திய இந்து மகாசபா வின் ஆன்மீக நிர்வாகியான ஆலப்பாக்கம் ராஜேந்திரன் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயம் வை.த்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
அருகில் வசிக்கும் திருமலை என்பவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு சாமியார் அருள்வாக்கு சொன்னது தான் காரணம் என எண்ணிய திருமலை, ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சாமியாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்களை மடக்கி பிடித்து சரமாரியாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அருள்வாக்கு சாமியார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






